சென்ற இதழ் தொடர்ச்சி...
6, 5-ஆம் அதிபதி 12-ல் இருத்தல் அல்லது பாதகாதியுடன் சம்பந்தம் பெறுவது குலதெய்வ சாபமாகும். சூரியன், சந்திரன் சம்பந்தப்படுவது பரம்பரை பரம்பரையாக தீர்க்கப்படாத சாபமாக இருக்கும். கோவில் சொத்து, வருமானத்தை அபகரிப்பதால் மட்டுமே சாபம் ஏற்படும். இதன்பலனாக, பூர்வீகத்தில் குடியிருக்க முடியாத நிலை, பூர்வீகச் சொத்தை இழக்கும் நிலை, கஷ்ட ஜீவனம், நல்ல வேலை- தொழில் அமையாத நிலை, தீராத கடன், கர்மவினை நோய், தொடர் துர்மரணம், ஊனமுள்ள குழந்தை பிறப் பது, திருமணம் நடக்காமலிருப்பது, திருமணமாகி குழந்தை பிறக்காமல் தலைமுறையே தழைக்கமுடியாத சூழ்நிலை, ஒரு குறிப்பிட்ட ஊரில் உருவாகும் இயற்கைச் சீற்றம் போன் றவை ஏற்படும்.
ஒரு ஊரில் நடக்கும் தொடர் சம்பவங்களே குலதெய்வம் மகிழ்வோடு இருக்கிறாதா? இல்லையா என்பதைக் காண்பித்துவிடும். ஒருவருக்கு குலதெய்வம் தெரியாமல் போவதற்கும் குலதெய்வ சாபமே காரணம். குலதெய்வ சாபம் உள்ளவர்கள், குலதெய்வம் தெரியாதவர்கள், ஜோதிடரீதியாக 5-ஆம் அதிபதி தொடர்பான தெய்வத் தைக் கண்டறிந்து அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நெய்தீபமேற்றி, தீபத்தை குலதெய்வமாக பாவித்து, சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு, தொடர்ந்து ஆத்மார்த்த வழிபாடு செய்துவர குல தெய்வம் தொடர்பான தகவல் கிடைக்கும்.
பெண்கள் திருமணம் முடிந்தபிறகு, பிறந்த, புகுந்த வீட்டு குலதெய்வத்தையும் வணங்கிவர பலன் இரட்டிப்பாகும். பிறந்த வீட்டின் குலதெய்வத்தையும் வழிபடும்போது, புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழமுடியும்.
குலதெய்வம் தெரியாமல் போவதற்கான காரணங்கள்
பூர்வீகத்தைவிட்டு வெளியேறி, சொந்த பூமிக்கு வராமல் இருப்பவர்களுக்கு சில வருடங்களில் குலதெய்வம் மறந்துபோகும்.
நண்பர்கள், உறவினர்களின் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபாடுசெய்து காரியசித்தி ஏற்பட்டு, சொந்த குலதெய் வத்தை மறந்துவிடுவார்கள். அதனால்தான் சில குறிப்பிட்ட சமூகத்தினர் தங்கள் குலத்தில் பிறக்காதவரை குலதெய்வக் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை.
தந்தையின் குலதெய்வத்தைக் கும்பிடாமல் தாயின் குலதெய்வத்தைக் கும்பிடுதல்.
பல சாமி படங்கள் வைத்திருக்கும் வீடுகளில், குலதெய்வத்தை பலபேர் மறந்துவிடுகிறார்கள்.
குலம் மாறிய திருமணம் குலதெய்வ வழிபாட்டை மாற்றிவிடும். கலப்புத் திருமணம்அதிகமிருக்கும் குடும்பத் தில், கும்பிடும் குலதெய்வம் சரி தானா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். சில குறிப்பிட்ட சமூகத்தினர் கலப்புத் திருமணம் செய்தவரை ஆதரிக்காமல் குடும்பத்திலிருந்து விலக்கிவிடுவார்கள்.
"எங்கள் குலதெய்வத்திற்கு கலப்புத் திருமணம் ஆகாது' என கூறுவதைக் கேள்விப் பட்டிருக்கிறோம். கலப்புத் திருமணம் குல, குடும்பப் பழக்கத்தை மாற்றி அழிவுப் பாதைக்குக் கொண்டுசெல்லும் என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும். தனக்குப் பிறக்கும் குழந்தைகள் சிறப்பாக வாழவேண்டுமென விரும்புபவர்கள் கலப்புத் திருமணத்தைத் தவிர்த்தல் நலம்.
ஒவ்வொரு சமூகத்திற்கும் குறிப்பிட்ட தெய்வமே குலதெய்வமாக இருக்கும்.
அவர்கள் கும்பிடும் இடம் மாறுமேதவிர தெய்வம் மாறாது. உதாரணமாக, நாடார் சமூகத்திற்கு அய்யனார், கருப்பசாமியே குலதெய்வமாகும். தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த சமூகத்தினர் குலதெய்வம் தெரியாதவர்கள் வீட்டில் பெண் எடுப்பதுமில்லை; கொடுப்பதுமில்லை. சம்பந்தம் செய்யும் இனத்தவர் குலதெய்வம் தெரியாமலிருந்தால் குலம் தழைக்காது என்பது இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும் வருடம் ஒருமுறை குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்யத் தவறுவதுமில்லை.
குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வந்தால் பிரச்சினை வருபவர்களின் ஜாதகத் தில் 5-ஆம் அதிபதி பலவீனமாக இருக்கும். இந்தக்குறை நீங்க, குலதெய்வ வழிபாட்டை ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அல்லது 5-ஆம் அதிபதியின் நட்சத்திரம் நடைபெறும் நாட்களில் வழிபாடு செய்யவேண்டும்.
அல்லது கோட்சாரத்தில் 5-ஆம் அதிபதி பலம்பெறும் நாளில் வழிபடவேண்டும். வீட்டில் பெண்கள் வீட்டுவிலக்குடன் இருக்கும்போதும், இறப்புத் தீட்டு இருந்தாலும் குலதெய்வக் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
பலருக்கு தொடர்வறுமை, கடன், திருமணத்தடையால் அடுத்த தலைமுறை உருவாகாமல் போகும்போதும், ஆண் வாரிசுகள் இல்லாமல்போகும் போதும் குலதெய்வத்தை அறிய ஆர்வம் ஏற்படுகிறது. அதுவரை குலதெய்வ அருமை தெரியாமல் இருக்கிறார்கள். குலதெய் வங்கள் கர்மவினைகளை நீக்கவல்லவை என்பதால், குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியமானதாகும். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து வழிபட்டால், குலம் தழைத்து சந்ததியினர் சந்தோஷமாக வாழ்வார்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு தருவது குலதெய்வம் மட்டுமே.
பூர்வீகத்தைவிட்டு வெளியேறுதல்
ஒருவரின் பூர்வீகத்தைக் குறிப்பிடுவது 5-ஆமிடம் என்னும் பாக்கிய ஸ்தானம். பூர்வீகத்தைக் குறிக்கும் கிரகங்கள் சனி, சூரியன், சந்திரன். இந்த கிரகங்களுடன் ராகு- கேதுக்கள் சேரும்போது பூர்வீகம் தொடர் பான பிரச்சினைகள், பூர்வீகத்தைவிட்டு வெளியேறும் நிலை உருவாகிறது.
ஒருவர் ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5-ஆமிடம் சிறப்பாக அமைந்தால், அவர் சொந்த மண்ணில் பெயரோடும் புகழோடும் வாழ்வார் என்பது ஜோதிட விதி. 5-ஆம் அதிபதி, 5-ஆமிடம் சிறப்பாக இருந்தும் பலர் பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டில் சென்று பிழைக்கிறார்கள். ஒருவர் பூர்வீகத்தைவிட்டு வெளியேறுகிறார் என்றால், நிச்சயம் அவருக்கு பூர்வீகம் தொடர்பான நன்மைகள் அதிகளவில் தடைப்படும். 5-ஆமிடமோ, 5-ஆம் அதிபதியோ மட்டும் பூர்வீகத்தில் வாழும் பாக்கியத்தைத் தீர்மானிப்பதில்லை.
ஜாதகரீதியாக புண்ணிய ஸ்தான வலிமையை ஆய்வுசெய்தால், பூர்வபுண்ணிய ஸ்தானம் பலம்பெற்றிருக்கும்போது சிலருக்கு நேர்மாறான பலன் ஏற்படுவது தெரியவருகிறது. பூர்வபுண்ணிய ஸ்தான வலிமையை நிர்ணயம்செய்யும்போது 5-ஆம் இடம், 5-ஆம் அதிபதியின் நிலையை மட்டும் பார்க்கக்கூடாது. கீழ்க்காணும் விதிகள் பொருந்த வேண்டும்.
ஜாதகரின் லக்னம், ஐந்தாமிடம் எனும் பூர்வபுண்ணிய ஸ்தானம், ஒன்பதாமிடம் என்பது பாக்கிய ஸ்தானம் கெடாமலும், 3, 6, 8, 12-ஆம் இடங்களில் மறையாமலும் இருக்கவேண்டும்.
5- ஆம் அதிபதியின் சாரநாதன் கேந்திர, திரிகோணாதிபதிகள் சம்பந்தம்பெற வேண்டும்.
திரிகோணாதிபதிகள் மறைந்தால், பூர்வீகத்தில் வாழ்ந்தால் முன்னேற்றம் குறைவாக இருக்கும்.
காலபுருஷ 5-ஆம் அதிபதி சூரியனும் 3, 6, 8, 12-ல் மறையாமல் இருக்க வேண்டும். ராகு- கேது சம்பந்தம் பெறக்கூடாது.
ஜனனகால ஜாதகத்தில் காலபுருஷ 5-ஆமிடமான சிம்மம் மற்றும் 5-க்கு 5-ஆம் இடமான தனுசிலும் ராகு- கேதுக்கள் நிற்கக்கூடாது.
பூர்வபுண்ணியம் நல்ல நிலையிலிருந்து பூர்வீகத்தில் வாழ்ந்தால், பூர்வபுண்ணிய ஸ்தானம் சர ராசியாக இருப்பின், விரைவாக முன்னேறிவிடுவர். ஸ்திர ராசியாக இருப்பின், முன்னேற்றம் நிதானமாக- நிலையாக இருக்கும். உபய ராசியாக இருப்பின், சில வருடங்களுக்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படும்.
மிகச்சுருக்கமாக, சூரியன், ராகு- கேது, சூரியன்- சனியுடன் சம்பந்தம் பெற்றாலும், சனி, ராகு- கேதுக்கள் சம்பந்தம் பெற்றாலும் பூர்வீகத்தைவிட்டு வெளியேறநேரும்.
சுமார் 40 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந் தவர்கள் தங்களின் பொருளாதாரத் தேவையைத் தங்களின் வருமானத்திற்குள் வைத்துக்கொண்டதால், பொருளாதாரத் தேவைக்காக பூர்வீகத்தைவிட்டு வெளியேற வில்லை. ஆனால் இந்த நவீன யுகத்தில் பணம் இல்லாமல் உலக இயக்கமே இல்லாத நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதால், பொருளாதாரத் தேவைக்காக இடப்பெயர்ச்சி செய்தே ஆகவேண்டிய சூழல் இருக்கிறது.
பெரும்பான்மையான ஊர்களில் தங்களின் குழந்தைகளின் கல்வி, தொழில் போன்ற காரணங்களுக்காக வெளியூர், வெளி நாட்டிற்கு அனுப்பிவிட்டு பெரியவர்கள் மட்டும் பூர்வீகத்தில் இருக்கிறார்கள்.
வெளியூர் செல்ல பூர்வீகத்தைவிட்டு வெளியேறும்போது ஊரின் எல்லை, காவல் தெய்வங்களுக்கு பூஜை செய்வது குறைந்துவிடும். பூஜை குறைந்தால் எல்லை, காவல் தெய்வங்களின் சக்தி குறைந்து விடும். அவர்களின் சக்தி குறைந்தால் மழை பெய்யாது. மழை பெய்யாவிட்டால் விவசாயம் நின்று போகும். பல ஊர்களில் எல்லை, காவல் தெய்வங்கள் பூஜையில்லாமல் கோவில்கள் பூட்டப்பட்டுள்ளன. பூர்வீகத்தை விட்டு வெளியேறுபவர்களுக்கு குலதெய்வம் , ஊர்க்காவல் தெய்வம் மறந்து போகும். ஏன், பலருக்கு பூர்வீகமே மறந்து போவது மிகவும் மனவருத்தத்தைத் தருகிறது. பலர், பிறந்த ஊரே சொந்த ஊர் என நினைக்கிறார்கள். முன்னோர்கள் வாழ்ந்த பூமியே பூர்வீகம். அத்துடன் நகரங்களிலுள்ள சொகுசு வசதிகள் (ஏ.சி, குளியலறை, பொழுதுபோக்கு அமைப்புகள்) பூர்வீகத்தில் குறைவாக இருப்பதால், பூர்வீகத்திற்குச் செல்வதைக் குறைத்து விடுகிறார்கள் அல்லது செல்வதே இல்லை. பூர்வீகத்தைவிட்டு வெளியேறி பொருள் தேட வேண்டாமென கூறவில்லை. வெளியூர் சென்றாலும் குலதெய்வ, எல்லை, காவல் தெய்வ வழிபாட்டை மறக்காமல் மேற் கொள்ளவேண்டும். அத்துடன் குழந்தை களுக்கு பூர்வீகத்தைப் பற்றியும், குலதெய்வம் பற்றியும் சொல்லி வளர்க்கவேண்டும். பூர்வீகத்தை மறக்கும்போது பலருக்கு பணம் மட்டுமே இருக்கும். நிம்மதியான- நிறைவான வாழ்க்கை இருக்காது. இன்னும் சிலருக்கு பணமும் இல்லாமல் வாழ்வே வெறுப்பாகிவிடுகிறது.
கோட்சாரத்தில் காலபுருஷ 9-ஆமிடமான தனுசில் சனி, கேது சேர்க்கை பலரை பொருள் தேவைக்காக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது. பூர்வீகத்தைவிட்டு வெளியேறினாலும் இயன்றவரை குலதெய் வம், எல்லை, காவல்தெய்வ வழிபாட்டை முறையாகத் தொடரவேண்டும். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் தங்கள் ஊரின் எல்லை, காவல்தெய்வ வழிபாட்டிற்கு உதவலாம்.
செல்: 98652 20406